ஒரு கிராமம் முழுக்க வைரம் – எடுக்க குவியும் ஆயிரக்கணக்கான மக்கள்

தென் ஆப்பிரிக்காவில் வைரக்கற்கள் தேடி ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் Sou மாநிலத்தில் உள்ள குவஹாலதி (KwaHlathi) கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைர கற்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அங்கு கிடைக்கும் பொருள் வைரக்கற்கள் தானா? என்பது உறுதியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கற்களை முதன் முதலில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு ஆடு-மாடு மேய்ப்பவர் அடையாளம் கண்டுள்ளார்.

சமவெளி பகுதி ஒன்றில் பள்ளம் தோண்டிய போது அதில் வெள்ளை நிறத்தில் கற்களை பார்த்ததாகவும், அது குவார்ட்ஸ் கிரிஸ்டல் (quartz crystals) கற்களை போலவே பளபளப்பாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தி காட்டுத்தீயாக பரவ, எல்லோரும் அந்த நிலப்பகுதியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் அங்குள்ள மக்கள் அனைவரும் இதை தாங்கள் வைரம் என்று நம்புவதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த தென் ஆப்பிரிக்க அரசு, அப்பகுதிக்கு கனிமவள வல்லுனர்கள் குழுவை இந்த கற்களை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளதாகவும், ஆய்வின் முடிவுகள் வந்த பின்னரே அது வைரமா? என்பது தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இந்த கற்களை தோண்டி எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அரசு இவ்வாறு மக்கள் திரளாக கூடுவது கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்றும், முதலில் அங்கிருந்து அனைவரும் செல்லவேண்டும் என எச்சரித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் பலருக்கு வேலை இல்லாத காரணத்தினால், பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைந்தாலும் மக்கள் ஒரே நேரத்தில் திரளாக அங்கு குவிந்துள்ளதாக கூறப்பட்டுகிறது.

இதற்கிடையே, சேகரிக்கப்பட்டுள்ள கற்களை 7 டொலர் முதல் 20 டொலர் (100 டு 300 South African Rand) வரை விற்பனை செய்து வருகின்றனர்.

Leave a Reply