நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பிரதேசங்கள்

வானிலை இன்று - மழை பெய்ய வாய்ப்புள்ள பிரதேசங்கள்

வானிலை இன்று – நாட்டின் சிலப் பகுதிகளில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை ஏனைய பகுதிகளில் சாதாரண வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் மேற்கு சரிவுகளிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்று (30-40) கிலோமீற்றர் வேகத்தில் வலுவாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வானிலை இன்று

Leave a Reply