மாட்டு வண்டியில் சென்ற நான்கு பேர் கைது

மாட்டு வண்டியில் பயணம் செய்த நான்கு பேர் கைது

மாட்டு வண்டியில் பயணம் செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலி நகருக்கு மாட்டு வண்டியில் பயணம் செய்த நான்கு பேரே இவ்வாறு, காலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள், காலி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஒருவரின் மகனும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் சக்தியின் காலி அமைப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில், காலி காவல்துறையின் நடமாடும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, காலியில் உள்ள நபர் ஒருவரிடமிருந்து, குறித்த மாட்டு வண்டியை அவர்கள் வாடகைக்கு பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply