சீருடையுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் செய்த மோசமான செயலால் பணிநீக்கம்

போதைப் பொருள் கடத்தல் - காவல்துறை அதிகாரி கதைு

போதைப் பொருள் கடத்தல் செய்தமைக்காக இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் சீருடையில் ஹெரோயினை கடத்திச் சென்றமைக்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே போதைப் பொருள் கடத்தல் செய்யும் போது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 53 கோடி ரூபாய் பெறுமதியான 52 கிலோ ஹெரோயின் மீட்கப்பட்டிருந்தது.

திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவினர், குறித்த காவல்துறை அதிகாரி சீருடையில் இருக்கும் போதே ஹிக்கடுவை பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

இந்த அதிகாரி தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply