பாணந்துறை முஸ்லிம் நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வௌியானது

பாணந்துறை முஸ்லிம் நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வௌியானது

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது பொலிஸ் வாகனத்திலிருந்து விழுந்து உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனை நேற்று களுபோவில போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் சிறுநீர் மாதிரியில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வெளிப்படுத்தப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இறந்தவரின் இறுதிச்சடங்கு நேற்று நடத்தப்பட்டதுடன், இதன் போது தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓடிக் கொண்டிருந்த பொலிஸ் வண்டியில் இருந்து வெளியே பாய்ந்த குறித்த நபர் உயிரிழந்தார் என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

Leave a Reply