பாடசாலைகள் எப்போது ஆரம்பமாகும்? கல்வி அமைச்சின் செயலாளர்

பாடசாலை ஆரம்பம் எப்போது? இன்று வௌியான தகவல்?

பாடசாலை ஆரம்பம் எப்போது என்பது பற்றி கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து வெளியிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அமைக்கப்பட்ட நிபுணர் குழு, சுயேச்சை குழு மற்றும் சுகாதார அதிகாரிகள் குழு ஆகியன அறிக்கை சமர்பித்துள்ளன.

அந்த அறிக்கைகளை ஆராய்ந்த பின் அறிக்கையொன்றை தயாரித்து எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பாடசாலை ஆரம்பம் எப்போது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு முன் ஆசிரியர்கள் அனைவருக்கும் கோவிட் முதல்சுற்று தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீளத்திறக்கப்படுவது மேலும் தாமதம் ஆகலாம் என்றே சொல்லப்படுகிறது.

Leave a Reply