பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டால் பஸ் சேவைகள் ஆரம்பமாகுமா?

பஸ் சேவைகள் சுகாதார கட்டுப்பாடுகளுடன் ஆரம்பமாகும்

எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர் மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் சேவைகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பஸ் சேவைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாட உள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply