பயணக் கட்டுப்பாடு தொடர்பில் இராணுவத் தளபதி வௌியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு - உத்தியோகபூர்வ அறிவிப்பு

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் பதில் அளித்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நீடிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள அந்த பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கு எவ்வகையான தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.

Leave a Reply