சஜித் பிரேமதாஸவின் எதிர்காலம் குறித்து சம்பிக்க கூறிய கருத்து

கொழும்பு செய்திகள் - சம்பிக்க ரணவக்கவின் அதிரடி கருத்து

கொழும்பு செய்திகள் – ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்காலம் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகளிலும் வேறு சில காரணங்களிலும் தங்கியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் சதித் திட்டம் நடப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கவை எதிர்கட்சித் தலைவராக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் செய்திகள் வௌியாகின.

இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் இருந்து செயற்படுவது பாட்டாளி சம்பிக்க ரணவக்க என்றும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய பாட்டளி சம்பிக்க ரணவக்க இந்த சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

“ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யோசனை முன்வைக்கப்பட்டபோது, சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என நானே கடிதம் மூலம் கோரினேன். இன்று சஜித் பிரேமதாஸ எதிர்கட்சித் தலைவர் ஆசனத்தில் உள்ளார். நாம் ஒருபோதும் யார் மீதும் சேறு பூச செயற்படுவதில்லை. விமர்சனம் இருந்தால் அதனை நேருக்கு நேர் கூறுவோம். ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் வருவாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. 2019ம் ஆண்டின் பின் நாம் அவருடன் கதைக்கவில்லை.” என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கேள்வி – உங்களுக்கும் கனவு இருக்கிறது என்று கதை ஒன்று உள்ளது தானே?

“இந்த நாட்டில் குடும்பவாதத்திற்கு சொந்தமாகிப் போன இந்த அரசியலை திறமைவாதத்தின் அடிப்படையில் செயற்திறன் உள்ள சந்ததிக்கு உரித்துடையாக்கும் கனவு எனக்கு உள்ளது. ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பரம்பரை பிரபுக்கள் பிரிவின் உரித்துடையவர். அதனால் அந்த பிரபுக்கள் பிரிவுக்கு எதிராகவே நாம் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம்.” என்று சம்பிக்க தெரிவித்தார்.

கேள்வி – சஜித்துடன் இருந்து உங்களுக்கு அதனை செய்ய முடியுமா?

“எமது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அப்போது 2019இல் இருந்த சிறந்த தெரிவு சஜித் பிரேமதாஸதான். அதனால் நாம் அந்த செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தை அவரது நடவடிக்கைகளும் வேறு சில காரணங்களும் தீர்மானிக்கும்” என்றார்.

கேள்வி – அடுத்த முறை மாற்றம் வருமா?

“எமக்குத் தெரியாது தானே. எனக்கு சொல்ல முடியாது வேறு யாருக்கும் சொல்லவும் முடியாது.” என்று சம்பிக்க ரணவக்க பதில் அளித்துள்ளார்.

கொழும்பு செய்திகள்

Leave a Reply