வளர்ப்பு நாயை பறக்கவிட்டு வீடியோ செய்த நபர் – எதிர்ப்பு கிளம்பியதால் கைது

வளர்ப்பு நாயை பறக்கவிட்டு வீடியோ செய்த நபர் - எதிர்ப்பு கிளம்பியதால் கைது

டெல்லியைச் சேர்ந்த 32 வயதாகும் கவுரவ் என்ற இளைஞர் “GauravZone” என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

40 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இவருடைய சேனலில் சமீபத்தில் ஒரு சர்ச்சை வீடியோவை கவுரவ் பதிவேற்றினார்.

அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் செல்லப்பிரானியை பறக்க வைக்கும் வீடியோவை பதிவேற்றியதால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கைது நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கிறார்.

அவர் வளர்த்து வரும் ‘டாலர்’ என்ற நாய்க் குட்டி மீது சில ஹைட்ரஜன் பலூன்களை கட்டி அதனை பறக்க வைத்திருக்கிறார்.

அவர் வசித்து வரும் பஞ்ச்ஷீல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் கார் ஒன்றின் மீது அமர்ந்துள்ள கவுரவ் அவர் வளர்த்து வரும் டாலர் எனும் நாய்குட்டியின் மீது சில ஹைட்ரஜன் பலூன்களை கட்டி அதனை கீழ்தளத்தில் இருந்து பறக்க விடுகிறார்.

அதே அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் உள்ள பால்கனி வரை அந்த நாய் காற்றில் பறக்கிறது. அருகில் உள்ள கவுரவின் தாயார் நாய்க்குட்டி பறப்பதால் மகிழ்ச்சியில் கை தட்டி ஆர்பரிக்கிறார்.

இந்த வீடியோவை கடந்த மே 21ம் தேதி கவுரவ் அவருடைய சேனலில் வெளியிட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் கவுரவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விலங்குகள் நல அமைப்புகளும் கவுரவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விலங்குகளை கொடுமைப்படுத்தியதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த வீடியோவை டெலிட் செய்த கவுரவ் தனது செயலுக்காக மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

கவுரவ் மீது விலங்குகள் கொடுமைச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.