புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனம் இறக்குமதி செய்ய

புதியவர்களுக்காக வாகனம் இறக்குமதி செய்ய

இலங்கையில் வாகன இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்ளூர் மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை ஒப்படைத்துள்ள புதிய உறுப்பினர்களுக்கு வாகனத்தை கொள்வனவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் திறைசேரிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அருண பத்திரிகை இது தொடர்பான செய்தியை வௌியிட்டுள்ளது.

இதேவேளை இவற்றைத் தவிர 50 அம்பியூலன்ஸ் வண்டிகள், 50 தண்ணீர் பவுசர்கள் மற்றும் 50 டபுள் கெப் ரக வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்னர் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி தடை தொடரும் என்றும் அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் உள்ள முக்கியமான வாகன இறக்கமதியாளர் சங்கத்திடம் இருந்து இந்த வாகனங்களை பெற அமைச்சரவைக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.