கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்று தொடர்பில் அவதானம்

கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்பம் தரித்து 28 வாரங்களின் பின்னர், கொரோனா தொற்று ஏற்பட்டால், அது மிகவும் ஆபத்தான விடயமாக அமையுமென, கொழும்பு- காசல் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சனத் ஜெனரோல் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்கள் தொற்றுக்கு உள்ளாகின்றமை தொடர்பில் இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில வேளைகளில் 28 வாரங்களில் பின்னர் தொற்று ஏற்பட்டால், கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் காட்டப்படாதென்றும் அதனால் நோயை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால், கர்ப்பிணிகள் விரைவில் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.