இலங்கை கிரிக்கட்ட அணியில் மூன்று பேருக்கு கொரோனா

இலங்கை கிரிக்கட்ட அணியில் மூன்று பேருக்கு கொரோனா

பங்களாதேஷ் பயணமாகியுள்ள இலங்கை கிரிக்கட் குழாமைச் சேர்ந்த மூவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை அணி வீரர்களான இசுரு உதான மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவ்வாறே, அக்குழாமில் இணைந்துள்ள பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மூவருக்கும் மேற்கொள்ளப்பட்ட முதல் பீசிஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள அதேவேளை, இன்று அவர்களுக்கு இரண்டாவது தடவையாக பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுக்கு தொடர்ந்தும் தொற்று உறுதியானால் இலங்கை அணியை நாட்டுக்கு மீள அழைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(23) டாக்காவில் இலங்கை நேரப்படி 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.