குசல் ஜனித் பெரேராவின் சாதனை

குசல் ஜனித் பெரேராவின் சாதனை

இலங்கை அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா தனது 6 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறும் 3 ஆவது ஒருநாள் போட்டியில் அவர் தனது சதத்தை பதிவு செய்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

தங்களது தோல்வியை முழுமையாக தவிர்க்கும் நோக்கில் சவாலுடன் இலங்கை அணி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது.