முகத்தில் எண்ணெய் பசை நீங்க இதோ டிப்ஸ்

முகத்தில் எண்ணெய் பசை நீங்க இதோ டிப்ஸ்

முகத்தில் எண்ணெய் பசை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது இன்று பலருக்கு இருக்கின்ற பிரச்சினை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது.

எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் குளிர் காலத்தை விட கோடைக்காலத்தில் தான் அதிகளவு பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

முக்கியமாக எண்ணெய் பசை சருமத்தினர் சந்திக்கும் பிரச்சனை முகப்பரு தான். அதோடு, முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பதால், முகம் கருமையாகவும் காட்சியளிக்க ஆரம்பிக்கும்.

ஆகவே, எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுது தான் சருமத்தில் பரு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்கும் வழிமுறை என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு மிகவும் நல்லது.

ஆரஞ்சு பழத்தின் சாற்றினை ஒரு பௌலில் பிழிந்து எடுத்து, அதனை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இதனால் எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்க உதவும்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க (oily skin care tips at home in tamil) கடைந்த மோரை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும்.

பின்பு 15 நிமிடம் வரை காத்திருக்கவும், பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் வழியும் எண்ணெய் மறைந்து விடும்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் தடுக்க (oily skin care tips at home in tamil)

பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

இதனால் பப்பாளி சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்வதோடு, எண்ணெய் சுரப்பையும் சரிசெய்ய உதவும்.

எண்ணெய் பசை சருமத்தினருக்கு சந்தனம் மிகச்சிறந்த பொருள். சந்தனம் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிக்கும்.

அத்தகைய சந்தன பவுடரை மஞ்சளுடன் சேர்த்து மாஸ்க் போடுவது எண்ணெய் பசை சருமத்தினருக்கு நல்லது.

அதற்கு சந்தன பவுடர் மஞ்சள் தூளை சரிசம அளவில் எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

முகத்தில் எண்ணெய் பசை நீங்க துளசி, எண்ணெய் பசை சருமத்தினருக்கு மட்டுமின்றி, பருக்களைப் போக்கவும், இதர சரும பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவும்.

அதற்கு சிறிது துளசி இலைகளை எடுத்து, நீரில் கழுவி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

முகத்தில் எண்ணெய் பசை போக

கற்றாழை ஜெல் ஒரு சிறந்த அழகு சாதன பொருள் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும், கற்றாழை சருமத்தில் உள்ள அனைத்து இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு என்றும் பொலிவினை கொடுக்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவுடன், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

பின் அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரால் முகத்தை மீண்டும் கழுவ வேண்டும்.

இச்செயலால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தலாம்.

ரோஸ் வாட்டரை பஞ்சுருண்டையில் நனைத்து, அதைக் கொண்டு தினமும் முகத்தை காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் துடைத்து எடுக்க வேண்டும்.

இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பது தடுக்கப்படுவதோடு, முகம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.