நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசை; கவலையில் ரசிகர்கள்

நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசை; கவலையில் ரசிகர்கள்

நடிகர் விவேக் தன் நீண்ட கால கனவு குறித்து தன் சமுக வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார். ஆனால் அது நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசை யாகவே முற்றுப்பெற்றுள்ளது.

ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை நடிகராக தன்னுடைய ஆளுமையைக் நிலை நிறுத்தி வந்தவர் நடிகர் விவேக்.

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக். நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’.

அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் சொல்லி வந்தார்.

நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்த படங்கள்

தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும் நடித்துள்ளார் விவேக், ’பஞ்ச்’ படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை.

அதன் பிறகு ’சொல்லி அடிப்பேன்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

கதாநாயகனாக ’நான்தான் பாலா’, ’பாலக்காட்டு மாதவன்’, ’வெள்ளைப் பூக்கள்’ போன்ற படங்களில் நடித்தார். இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

உலகநாயகன் கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்பட்ட விவேக்

அனைத்து முன்னணி நடிகர்களுடனும் புதிய நடிகர்களுடனும் நடித்துவிட்ட விவேக்கிற்கு திரைத்துறைக்கு வந்த நாளிலிருந்தே கமலுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் எனும் ஆசை இருந்து வந்தது.

ஷங்கர் இயக்கத்தில் கமலின் நடிப்பில் ’இந்தியன் 2’ தொடங்கப்பட்டது. ‘என்னுடைய நீண்டகாலக் கனவு உலகநாயகன் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது. அந்தக் கனவு ‘இந்தியன் 2’ வின் மூலமாக நனவாகப் போகிறது.

அவருடன் இந்தப் படத்தில் நானும் நடிக்கிறேன்’ என்று தன் நீண்ட கால கனவு குறித்து தன் சமுக்க வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.

இது நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசை

இளம் தலைமுறை நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ள அவர் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனான கமல்ஹாசனுடன் மட்டும் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை.

பலமுறை அதற்கான வாய்ப்புகள் கைகூடி வந்தபோதிலும், ஏதோ ஒரு காரணத்தால் கடைசி வரை விவேக்குக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விட்டது.

கமலுடன் இணைந்து ஒரு காட்சியில் கூட நடிக்காத நிலையில் விவேக் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் விவேக்கின் நிறைவேறாத ஆசையாக அது உள்ளது.