ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டே

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐந்து பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டே மாநகர சபையின் உறுப்பினர் தம்மிக சந்திரரத்னவை மாநகர சபை மற்றும் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எதிராக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இதற்கான தடையுத்தரவை இன்று(29) பிறப்பித்துள்ளது.