​வேறு மாகாணங்களில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்

​வேறு மாகாணங்களில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்

மேல் மாகாணத்தில் தீவிரமாக பரவிய கொரோனா வைரஸ் தொற்று, வேறு பகுதிகளிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு பரவும் வைரஸின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
தற்போது கிடைத்துள்ள தகவலுக்கமைய மேல் மாகாணத்திற்கு வெளியே பரவல் 50 வீதத்துக்கும் அதிகமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக கேகாலை பிரதேசத்தில் புதிதாக இரண்டு கொரோனா கொத்தணிகள் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுளள்ளார். அந்த தொற்றாளர்களின் முதல் நாளிலேயே நோய் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.