விஷேட அறிவிப்பை வௌியிடத் தயாராகும் நீதியமைச்சர்

விஷேட அறிவிப்பை வௌியிடத் தயாராகும் நீதியமைச்சர்

நீதியமைச்சர் அலிசப்ரி அடுத்தவாரத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கள மொழி மூலமான செய்தி இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் உயிரிழக்கின்ற நபர்களின் உடல்களை தகனம் செய்வதாக அரசாங்கம் தொடர்ந்தும் அறிவித்து வருகிறது.

எனினும் முஸ்லிம் சமூகம் மற்றும் எதிர்கட்சியினர், மனித உரிமைகளைப் பாதுகாத்து, அடக்கம் செய்வதற்கான உரிமையை முஸ்லிம் சமூகத்தினருக்கு வழங்கிவைக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

பலதரப்பட்ட பேச்சுக்களை முஸ்லிம் சமூகம் மட்டத்தில் அமைச்சர் அலிசப்ரி நடத்தியிருக்கின்றார்.

இந்த சந்திப்பின்போதெல்லாம் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தை அழுத்தும்படியே அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துவந்தனர்.

எனினும் கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது கருத்து வெளியிட்டிருந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தகனம் செய்வதே தற்போதைய தீர்மானம் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இதனிடையே அழுத்தங்களை எதிர்கொண்டுவரும் அமைச்சர் அலிசப்ரி எதிர்வரும் சில தினங்களில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது.