ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதி

ரவூப் ஹக்கீமுக்கு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கொவிட்-19 தொற்றுக்குள்ளானார்.

தனக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகி இருப்பதாக ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய 118 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் ஐந்து பேர் உட்பட ஹெட்டிப்பொலவில் உள்ள அலுவலகத்திற்கு மக்கள் சந்திப்பு தினத்தன்று சமூகமளித்த 75 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.