மரபணு மாறிய புதிய கொரோனா வைரஸுடன் இலங்கையில் நுழைந்த நபர்

மரபணு மாறிய புதிய கொரோனா வைரஸுடன் இலங்கையில் நுழைந்த நபர்

மரபணு மாறிய புதிய வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது தொற்றாளர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புதிய வகை வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவருக்கே இந்த தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரபணு மாறிய வைரஸ் தான் அவருக்கு தொற்றியுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன்படி குறித்த நபருக்கு தொற்றியிருப்பது மரபணு மாறிய புதிய வைரஸ் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு இன்று இதனை உறுதி செய்துள்ளது.

மரபணு மாறிய VUI-202012/0 என்ற புதிய வகை வைரஸினால் உயிராபத்துக்கள் இல்லாத போதும், முன்னரை 50 மடங்கு அதிகமாக பரவும் வல்லமை கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.