அவிஸ்ஸாவளையில் 22 கிலோ அரிய வகை மாணிக்க கல் கண்டுபிடிப்பு

அவிஸ்ஸாவளையில் 22 கிலோ அரிய வகை மாணிக்க கல் கண்டுபிடிப்பு

அவிசாவளை – தெஹியகல பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் 22 கிலோ எடையுள்ள ஒரு அரிய படிக இரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.

இந்த அரிய இரத்தினக் கல்லில் நீர் குமிழி இருப்பதால் அதிக மதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த இரத்தினக் கல் ஒரு லட்சம் கரட் எடையுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படிக இரத்தினத்தின் வணிக மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை என தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.