அரசாங்கத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு அலை உருவாகும்

அரசாங்கத்திற்கு எதிராக பாரிய எரிப்பு அலை உருவாகும்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு அலை உருவாகலாம் என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

“விற்பனை செய்யவில்லையென்றால், 49% பங்கு வழங்குவதானால் அதுவும் விற்பனைதான். அதனை செய்யக் கூடாது.

மக்கள் எதிர்ப்புக்கு செவிசாய்க்காது அரசாங்கம் செயற்பட்டால் அரசாங்க எதிர் பாரிய அலை உருவாகும். அதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி, பிரதமர், துறைமுக அமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அதானி நிறுவனம் மிகவும் அபாயகரமானது. இந்தியாவில் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை வீணாக்கிய நிறுவனம்.
இறுதியில் அனைத்து கப்பல்களையும் இவர்கள் கிழக்கு முனையத்திற்கே அழைத்து கொள்வர். எமக்கு ஒன்றும் இருக்காது. அதிக கொமிஷன் கிடைக்கும் கோடிக்கணக்கில்.

அதற்காக செயற்பட்டால் அது தேசத்துரோக செயல்” என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.