2021ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உள்ள அதிசயம்

2021ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உள்ள அதிசயம்

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அனைத்து கிழமைகளும் தலா 4 நாட்கள் வருவது அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய ஏழு கிரகங்களால் ஆளப்படுவதாக வான் ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.

இந்த 7 நாட்களும் வானில் தென்படும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு ஒளிதரும் பொருட்களுக்குரிய (கிழமை உடைய) நாட்களாகப் பன்னெடுங்காலமாக அறியப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய கிழமைகள் 4 முறையும், சில கிழமைகள் 5 நாட்களும் வருவது வழக்கம்.

ஆனால் 2021 புத்தாண்டில் வருகிற பெப்ரவரி மாதம் எப்போதும் இல்லாதபடி ஒரு அதிசயமாக 7 கிழமைகளும் இந்த மாதத்தில் தலா 4 நாட்கள் வீதம் வருகிறது.

இந்த மாதத்தில் எந்த கிழமையும் 5 நாட்கள் வரவில்லை. வழக்கத்தை விட வித்தியாசமான முறையில் அனைத்து நாட்களும் தலா 4 நாட்கள் வருவதால் இதனை ஒரு அதிசய மாதமாக ஜோதிட ரீதியாகவும், நிபுணர்களாலும் பார்க்கப்படுகிறது.