வாகன ஓட்டுநர்களுக்கு விஷேட எச்சரிக்கை

வாகன ஓட்டுநர்களுக்கு விஷே எச்சரிக்கை

பண்டிகை காலங்களில் வாகன பரிசோதனைகள் அதிக அளவு இடம் பெறுவதற்கான காரணம் நபர்களை கைது செய்வதற்காக அல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பதே எமது நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட வாகன சோதனைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வாகன சோதனையில் சுமார் 9 ஆயிரம் பொலிசார் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இது செயல்படுத்தப்படுகிறது.

பொதுமக்களிடம் தண்டப்பணம் அறவிடுதல், கைது செய்தல் எமது எதிர்பார்ப்பு அல்ல. பொதுமக்களின் பாதுகாப்பை கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

வீதி விபத்துக்களை குறைத்தல், மதுபோதையில் வாகனங்கள் செலுத்தும் நபர்களை கைது செய்தல், வீதி பாதுகாப்பினை உறுதி செய்தல், அதேபோல் அதிகவேக வேகத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்தல், குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தல் அல்லது முழுமையாக ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றிடம் கோரிக்கை விடுவதாக அவர் தெரிவித்தார்.