பொது மக்களுக்கு இரண்டு விஷேட அறிவிப்புக்கள்

பொது மக்களுக்கு இரண்டு விஷேட அறிவிப்புக்கள்

திருகோணமலை மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்வதை இயன்றளவு தவிர்க்குமாறு, மாவட்ட கொரோனா ஒழிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இங்கு கடந்த மூன்று தினங்களுக்குள் 70 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மாவட்ட செயலாளர் சமன் தர்சன தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவும் அபாயம் காணப்படுவதால் பண்டிகை காலத்தில் பயணங்களை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இம்முறை சிவனொளிபாத யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதை தவிர்க்குமாறு, நுவரெலியா மாவட்ட கொரோனா ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஹட்டன் தோட்டப்புற பகுதிகளில் கொவிட் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, நுவரெலியா மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.