பேருவளையில் பெண் ஒருவரின் உடல் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதா?

பேருவளையில் பெண் ஒருவரின் உடல் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதா?

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் திடீரென உயிரிழந்ததை அடுத்து அவரது உடன் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, பேருவளை- சீனக்கோட்டை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் 78 வயது பெண் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்.

அந்த வீட்டில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில் அந்த வயோதிபப் பெண் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் அடக்கம் செய்திருப்பது குறித்து பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் – ட்ரூ நியூஸ்