பிள்ளைகளுக்கு கொரோனா தொற்றாமல் தாய் ஒருவர் எடுத்த விபரதீ முடிவு

பிள்ளைகளுக்கு கொரோனா தொற்றாமல் தாய் ஒருவர் எடுத்த விபரதீ முடிவு

கொழும்பில் வயோதிபர்களுக்கு கொரோனா தொற்றும் என தொலைக்காட்சியில் அடிக்கடி பார்த்தமையினால் பெண் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்றி அது பிள்ளைகளுக்கும் பரவும் என அச்சத்தில் அவர் தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என அவரது மகன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

வயோதிப பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டமை தொடர்பில் சாட்சி வழங்கும் போது மகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டவர் வத்தளை, ஹுனுபிட்டி, வெடிகந்த வீதியை சேர்ந்த 73 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த தாய் தொலைக்காட்சி செய்திகளை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.

செய்தி பார்த்த பின்னர் தனக்கு உடல் வலிப்பதாக கூறியுள்ளார். பின்னர் அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார்.

அங்கு தீயிட்டுக் கொண்ட தாயை காப்பாற்ற மகன் முயற்சித்த போதிலும், அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றவில்லை என உறுதியாகியுள்ளது.