பாடசாலை சென்ற மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

பாடசாலை சென்ற மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

நிகவெரட்டிய பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்கள் ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிகவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

மாணவி பாடசாலைக்கு சென்றவுடன் அவரது பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர்.

அவர்கள் வீட்டுக்கு வந்துள்ள போதிலும், பாடசாலைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரம் கடந்தும் வீட்டுக்கு வருகை தராதால் சந்தேகம் கொண்ட அந்தப் பிள்ளையின் தாயார் அது தொடர்பில் நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இதன்போது விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியை வீடு ஒன்றிலிருந்து மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் என்று கூறப்படும், ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 24 – 70 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.