பள்ளிவாசல் பொறுப்பாளர்களுக்கு வௌியான செய்தி

பள்ளிவாசல் பொறுப்பாளர்களுக்கு வௌியான செய்தி

அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கும் ⁄பொறுப்பாளர்களுக்கும், வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களம் விஷேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

இது நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பை கொண்டாடும் காலமாகும். எனவே அவர்களுடன் நமது சகோதரத்துவ உறவை புதுப்பிக்க இது ஒரு நல்ல தருணம் ஆகும்.

ஆகவே, தங்கள் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அல்லது கிறிஸ்தவ சங்கங்களுடன் உங்கள் நட்பை மேம்படுத்த இந்த வாய்பை பயன்படுத்த நாங்கள் உங்களை ஊக்குவிக்கின்றோம்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியை தங்கள் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அல்லது கிறிஸ்தவ சங்கங்களுக்கு அனுப்புவதுடன் நட்புணர்வோடு அவர்களுடன் பரிசுகளை பகிர்ந்து கொள்ளவும் முடியும் என்று வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“அனைத்து கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான விடுமுறை வாழ்த்துக்கள்.

இயேசு கிறிஸ்துவின் அற்புதமான பிறப்பு (அவர்களின் மீது சாந்தி உண்டாகட்டும்) தெய்வீக காருண்யம், பூமியில் அவர் சமாதானத்தை ஆதரிப்பதையும் நினைவூட்டுகின்றது.

நத்தார் பண்டிகை காலம் எளிமை, பசுமையான நினைவுகள், நன்றிகள் மற்றும் குடும்பத்திற்கான நேரத்தை குறிக்கின்றன. கொவிட் 19 அசாதார சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டு நம் அன்புக்குறியவர்களுடன் கொண்டாட முடியாவிட்டாலும் நத்தார் பண்டிகை நினைவு, மற்றும் பாராட்டு என்பவற்றை நினைவுட்டுகின்றோம்.

எமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள். இலங்கையிலும் உலகில் உள்ள அனைவருக்கும் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட மற்றும் அமைதியான புத்தாண்டிற்காக பிரார்த்திக்கின்றோம்.

ஏ.பி. எம். அஷ்ரப்
பணிப்பாளர்
வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களம்.
23.12.2020