துமிந்த சில்வா விடுதலை செய்யப்படுவாரா? அமைச்சரின் பதில்

துமிந்த சில்வா விடுதலை செய்யப்படுவாரா? அமைச்சரின் பதில்

படுகொலை வழக்கில் மரண தண்டனைக் கைதியாக சிறைவைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த இன்று வெளியிட்டிருக்கின்றார்.

கண்டியில் இன்று ஊடக சந்திப்பை நடத்திய அவரிடம், முன்னாள் எம்.சி துமிந்த சில்வா சிறைக்கைதிகளோடு சேர்த்து விடுதலையாவப் போவதாக வெளியாகிவரும் தகவல் குறித்து வினவினார்கள்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், “தனிப்பட்ட நபர்கள் குறித்து தீர்மானங்களை அரசாங்கம் எடுக்காது. நல்லொழுக்கம் அடிப்படையில் கைதிகள் விடுதலையாகின்றனர். அந்தப்பட்டியலில் துமிந்த சில்வாவின் பெயர் இருந்தால் அவரும் விடுதலை செய்யப்படுவார்” என்று கூறினார்.

மேலும் போதைப்பொருள் விவகார கைதிகள் விடுதலையாகின்றதை பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

தகவல் – ட்ரூ நியுஸ்