ஜனாஸா எரிப்பு விவகாரம் – ஐக்கிய தேசிய கட்சியின் அதிரடி அறிக்கை

ஜனாஸா எரிப்பு விவகாரம் - ஐக்கிய தேசிய கட்சியின் அதிரடி அறிக்கை

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள நில​மை தொடர்பில் தனது நிலைப்பட்டை ஐக்கிய தேசிய கட்சி அறிக்கை ஒன்றை வௌியிட்டு விளக்கமளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் குறித்து அரசாங்கம் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

மக்களுடன் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்வதா? எரிப்பதா? என்பதை அந்தந்த இன மக்களே தீர்மானிப்பர்.

எனினும் விசேட சந்தர்ப்பங்களின்போது அரசாங்கம் அது குறித்து தீர்மானம் எடுக்கையில் பௌத்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.