ஜனாஸா எரிப்பு விவகாரம் – அறிக்கை சமர்பிப்பு

ஜனாஸா எரிப்பு விவகாரம் - அறிக்கை சமர்பிப்பு

கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் மரணிப்பவர்களின் சரீரங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

பேராசிரியர் ஜெனீஃபர் பெரேரா உள்ளிட்ட 9 பேர் அடங்களாக குறித்த குழு நியமிக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சுக்கு நேற்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.