ஜனாஸா எரிப்பு – ரணில் கூறியுள்ள விடயம்

ஜனாஸா எரிப்பு - ரணில் கூறியுள்ள விடயம்

கொரோனா தொற்றால் உயிாிழப்பவர்கள் தொடர்பில் அனைவருடனும் கலந்தாலோசித்த பின்பே அரசு தீர்மானங்களை மேற்கொண்டிருக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் உடல்களை எாிப்பதா, புதைப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் உாிமை மக்களுக்கே உள்ளதாகவும் இது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் முன் பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டுமெனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் சுட்டிக் காட்டினார்.

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று (23) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கருத்து தொிவித்திருந்தார்.

இதேவேளை மேற்படி விடயம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் போன்று கொாியா, இந்தியா, ஜேர்மனி போன்ற நாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை ஆராய்ந்து பார்ப்பது அவசியம் எனவும் அவர் தொிவித்தார்.

கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்கிறார்கள், முஸ்லிம்கள் இறந்தவர்களை அடக்கம் செய்கிறார்கள். அவர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு செய்வதால் அவர்களின் விருப்பங்களை நாங்கள் மதிக்கிறோம்.

பெளத்தர்களும் இந்துக்களும் அடக்கம் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும், இறந்தவர்களை தகனம் செய்யும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

இந்த தனிப்பட்ட முடிவுகளை நாம் மதிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் மத சமூகங்களிடையே ஒற்றுமையை வளர்த்து வருகிறது.

எனவே, ஒருதலைப்பட்சமாக செயல்பட வேண்டாம் அல்லது இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளை அரசியல்மயமாக்க வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

சம்பந்தப்பட்ட அனைத்து சமூகங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஒரு இறுதி முடிவை எட்ட வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.