ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கையில் கொவிட்-19 நோயினால் உயிரிழக்கின்ற நபர்களின் சரீரங்கள் கட்டாயமாக தகனம் செய்யப்படுகின்றமைக்கு எதிராக பிரித்தானியாவின் முஸ்லிம் பேரவை சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது.

த கார்டியன் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதற்காக பிரித்தானிய முஸ்லிம் பேரவை விசேட குழு ஒன்றை நியமித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம்களுடைய மரபினை மீறி கொவிட் நோயினால் மற்றவர்களுடைய சரீரங்கள் தகனம் செய்யப் படுகின்றன.

இதன்ஊடாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளையும் சர்வதேச விதிகளையும் இலங்கை அரசாங்கம் மீறி இருப்பதாக பிரித்தானிய முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த இந்த தீர்மானத்தை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என கோரி பிரித்தானிய வெளிவிவகார செயலகம் மற்றும் பிரித்தானியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஆகியவற்றுக்கு பிரித்தானிய முஸ்லிம் பேரவை கடிதங்களையும் அனுப்பி வைத்துள்ளது.