சில பிரதேசங்கள் உடனடியாக லொக்டவுன்

சில பிரதேசங்கள் உடனடியாக லொக்டவுன்

உடனடியாக அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி அவிஸ்ஸாவளை, கொஸ்கம மற்றும் றுவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதுவரை தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.