கொரோனா தடுப்பூசியால் பெரும் பணக்காரர்களாக மாறியவர்கள்

கொரோனா தடுப்பூசியால் பெரும் பணக்காரர்களாக மாறியவர்கள்

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ததால் உலக அளவில் பெரும் பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மருந்து நிறுவன அதிபர்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தக நிறுவனமான ‘போர்ப்ஸ்’, உலக அளவில் பெரும் பணக்காரர்கள் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு, சுகாதாரத்துறையில் புதிதாக பெரும் பணக்காரர்களாக உருவெடுத்துள்ள 50 புதுமுகங்களை அந்த பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.

அதில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்துள்ள அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா, ஜெர்மனி மருந்து நிறுவனமான பயோஎன்டெக் (பைசர் தடுப்பூசி) ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர்களும் அடங்குவர்.

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ததால், பங்குச்சந்தையில் அந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்ததாலும், பெருமளவு முதலீடு அதிகரித்ததாலும் அவர்களின் வருவாய் உயர்ந்துள்ளதால் இந்த பட்டியலில் அவர்கள் இடம் பெற்றுள்ளனர்.