காலி முஸ்லிம் நபரின் ஜனாசாவை எரிக்க நடவடிக்கை

காலி முஸ்லிம் நபரின் ஜனாசாவை எரிக்க நடவடிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம் ஒருவரின் (அப்துல் காதர் ) உடலை தகனம் செய்யுமாறு காலி பொலிஸசாருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேல குணவர்தன அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லிம் ஒருவரின் உடலை சுகாதார அதிகாரிகளின் மேலதிக ஆலோசனை வரும் வரை தகனம் செய்யக் கூடாது என்று முன்னதாக, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எவ்வாறாயினும் அந்த உடலை அகற்றும் வரையில் தாம் பணியில் இருந்து விலகியிருப்பதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய பிரிவின் வைத்தியர்களும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் நீதிமன்ற வைத்திய பிரிவின் வைத்தியர்களும் அறிவித்துள்ளனர்.

இந்தப் பின்னணியிலேயே குறித்த உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேல குணவர்தன அறிவுறுத்தியுள்ளார்.

அவரது அறிவுறுத்தல்களை நீதிமன்றத்திற்கு தெரிவித்த பின்னர் உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் காலி பொலிஸுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

Source – Newswire