காலி முஸ்லிம் நபரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது

காலி முஸ்லிம் நபரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது

காலி தெத்துடுகொடவில் கடந்த 19ஆம் திகதி கொரோனாவால் மரணித்தவரின் ஜனாஸா, காலி தடல்ல மயானத்தில், அரச செலவில் இன்று (24) தகனம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம் ஒருவரின் (அப்துல் காதர் ) உடலை தகனம் செய்யுமாறு காலி பொலிஸசாருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேல குணவர்தன நேற்று அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த முஸ்லிம் நபரின் உடலை சுகாதார அதிகாரிகளின் மேலதிக ஆலோசனை வரும் வரை தகனம் செய்யக் கூடாது என்று முன்னதாக, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அந்த உடலை அகற்றும் வரையில் தாம் பணியில் இருந்து விலகியிருப்பதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய பிரிவின் வைத்தியர்களும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் நீதிமன்ற வைத்திய பிரிவின் வைத்தியர்களும் அறிவித்தனர்.

இந்தப் பின்னணியிலேயே குறித்த உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேல குணவர்தன நேற்று அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்நிலையில் குறித்த ஜனாஸா இன்று அரச செலவில் தகனம் செய்யப்பட்டுள்ளது.