உடனடியாக லொக்டவுன் செய்யப்பட்ட பிரதேசங்கள்

உடனடியாக லொக்டவுன் செய்யப்பட்ட பிரதேசங்கள்

உடனடியாக அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மின்னனா, வெலிகொட, யகுடகொட, அஸ்ககுல வடக்கு, போபத்த ஆகிய இடங்களுக்கு இவ்வாறு தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளள்து.

இதுதவிர கொடகாவல பிரதேச செயலகப’ பிரிவுக்கு உட்பட்ட றக்குவானை நகரம், றக்குவானை வடக்கு, றக்குவானை தெற்கு, முசிம்புல மற்றும் கொட்டல ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.