உடனடியாக நடவடிக்கை எக்குமாறு நீதியமைச்சர் பணிப்பு

உடனடியாக நடவடிக்கை எக்குமாறு நீதியமைச்சர் பணிப்பு

தற்போது வெற்றிடம் நிலவும் 302 அவசர மரண விசாரணை பிரிவுகளில், சேவைகளை தாமதமின்றி வழங்குவதற்காக அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 824 அவசர மரண விசாரணை பிரிவுகள் இயங்குகின்றன.

தற்போதைய நிலையில் அவசர மரண பரிசோதனையாளர்களுக்காக பாதுகாப்பு உடை தொகுதிகளை வழங்குதல் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

குறித்த வெற்றிடங்களை வர்த்தமானியில் அறிவித்து, தொலை நிலை முறைமைக்கு அமைய தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை உடனடியாக சோதனைக்கு உட்படுத்தி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது
ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.