அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இரண்டு இடங்கள்

அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இரண்டு இடங்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமாக, நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழமாக உள்ள இரண்டு பிரதேசங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிக்கையை ஒப்படைத்துள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதன்படி வடக்கு மாகாணத்தில் மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசமும் கிழக்கு மாகாணத்தில் எரகம எனும் பிரதேசமும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசங்களில் தரைமட்டத்திலிருந்து 30 ஆடி ஆழத்தில் கூட நீரை கண்டுபிடிக்க முடியாதென அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய நிலத்தடியிலிருந்து நீர் மட்டம் ஆழமாக உள்ள இடத்தைக் கண்டுபிடிக்குமாறு தன்னிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

அதன்படி தனது அமைச்சின் புவியியலாளர் ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்ததாக அமைச்சர் நானாயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் குழுவினால் பரிசீலனைக்கு எடுக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.