நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சருக்கும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் மத்தியில் ஏற்பட்ட அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.