கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் தற்போதைய நிலை

இன்று (20) காலை வரையில் கந்தகாடு சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்து 560 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 415 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் சிகிச்சை பெறுபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

63 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் சேவையாற்றுபவர்கள் எனவும் 5 பேர் விருந்தினர்கள் எனவும் மற்றும் 41 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று காலை QR 668 என்ற விமானத்தில் டோஹாவில் இருந்து 10 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வரையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து 24203 பேர் தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 53 தனிமைப்படுத்தல் முகாம்களில் 1052 பேர் இதுவரையில் தனிமைப்படுத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.