டொனால்ட் ட்ரம்பை கைது செய்ய பிடியாணை உத்தரவு

ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, கைதுசெய்ய ஈரான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், காஸ்ஸெம் சுலேமானீ மீதான ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 35இற்கும் மேற்பட்டோரையும் தடுத்து வைக்க இன்டர்போலிடம் ஈரான் உதவி கோரியுள்ளது.

இதற்காக, பிரான்ஸின் லியோனைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியையும் நாடியுள்ளது.

எனினும், ஈரான் உதவி கோரியதற்கு இன்டர்போல் உடனடியாக பதிலளிக்கவில்லை.